Home Blog

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்
இயேசுவுக்காய் இங்கே பாட வந்தோம்
வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்
இயேசுவுக்காய் இங்கே பாட வந்தோம்
இரக்கமுள்ள எங்கள் தேவனுக்கே
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்திடுவோம்
இரக்கமுள்ள எங்கள் தேவனுக்கே
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்திடுவோம்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

ஏற்கெனவே எம்மில் அன்புகூர்ந்த
காரணத்தால் இங்கு இயேசு வந்தார்
ஏற்கெனவே எம்மில் அன்புகூர்ந்த
காரணத்தால் இங்கு இயேசு வந்தார்
பாவத்திலே பலியாகும் நம்மை
காத்திடவே ஜீவபலியுமானார்
பாவத்திலே பலியாகும் நம்மை
காத்திடவே ஜீவபலியுமானார்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

நன்றியுடன் எங்கள் தேவனுக்காய்
நல்ல  கனிகளை மண்ணில் கொடுத்திடுவோம்
நன்றியுடன் எங்கள் தேவனுக்காய்
நல்ல  கனிகளை மண்ணில் கொடுத்திடுவோம்
அன்பினிலே என்றும் நிலைத்திருந்து
எங்கள் மேய்ப்பரின் வழியிலே நடந்து செல்வோம்
அன்பினிலே என்றும் நிலைத்திருந்து
எங்கள் மேய்ப்பரின் வழியிலே நடந்து செல்வோம்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

எட்டுத் திசைகளிலும் இருந்தே

எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
இயேசுவின் சத்தியத்தில்
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்
இயேசுவின் சத்தியத்தில்
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்
முன்னர் குறிக்கப்பட்டு
கர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்
முன்னர் குறிக்கப்பட்டு
கர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்
இத்தரை மீதினிலே
இனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்
இத்தரை மீதினிலே
இனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்

சத்தியத்தை அறிந்தே
நித்திய தேவனை ஸ்தோத்தரிப்போம்
சத்தியத்தை அறிந்தே
நித்திய தேவனை ஸ்தோத்தரிப்போம்
பக்தியுடன் தொழுதே
இயேசுவின் நாமத்தைப் பாடிடுவோம்
பக்தியுடன் தொழுதே
இயேசுவின் நாமத்தைப் பாடிடுவோம்
கர்த்தரின் பிள்ளைகளாய்
இனி நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம்
கர்த்தரின் பிள்ளைகளாய்
இனி நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம்
எத்தனை துன்பத்தையும்
அவரால் முற்றும் ஜெயம் கொள்ளுவோம்
எத்தனை துன்பத்தையும்
அவரால் முற்றும் ஜெயம் கொள்ளுவோம்

எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்

வார்த்தையில் தேவன் வந்தார்
எம்மை வாழவைக்கப் பிறந்தார்
வார்த்தையில் தேவன் வந்தார்
எம்மை வாழவைக்கப் பிறந்தார்
பாவத்தில் மீட்டெடுத்தே
எமக்காய் பாடுகள் அனுபவித்தார்
பாவத்தில் மீட்டெடுத்தே
எமக்காய் பாடுகள் அனுபவித்தார்
அன்பு சொரிந்தெமக்காய்
அவர் அல்லல் பல அடைந்தார்
அன்பு சொரிந்தெமக்காய்
அவர் அல்லல் பல அடைந்தார்
வள்ளலின் பேரன்பிலே
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
எங்கள் தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்
தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
உமது ஆறுதலைக் காண வந்த வேளையிலே
ஆறுதலைக் காண வந்த வேளையிலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே
சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே

நித்தியத்து ஜீவனையும் தாருமையா
நித்தியத்து ஜீவனையும் தாருமையா
இயேசு நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்
நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

என்னோடு வாழும் என் இயேசு நாதன்

என்னோடு வாழும் என் இயேசு நாதன்

என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்
கண்மூடி நானும் கால் மாறும் வேளை
கை நீட்டி வழி காட்டினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

மண்மீது நானும் தவிக்கின்ற போது
விண்ணின்றும் இரங்கி வந்தார்
மண்மீது நானும் தவிக்கின்ற போது
விண்ணின்றும் இரங்கி வந்தார்
பண்ணோடு நானும் துதி பாடும் போது
கலங்காதே எனத் தேற்றினார்
பண்ணோடு நானும் துதி பாடும் போது
கலங்காதே எனத் தேற்றினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

என்நாளும் வந்து என் இயேசு ராஜன்
என்னோடு உறவாடுவார்
என்நாளும் வந்து என் இயேசு ராஜன்
என்னோடு உறவாடுவார்
முன்நாளில் செய்த என் பாவம் நீக்கி
தன்னோடு உறவாக்கினார்
முன்நாளில் செய்த என் பாவம் நீக்கி
தன்னோடு உறவாக்கினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

கண்மூடும் வேளையிலும் கலங்காதே என்று
கண்ணீரைத் துடைக்கின்றவர்
கண்மூடும் வேளையிலும் கலங்காதே என்று
கண்ணீரைத் துடைக்கின்றவர்
சொந்தங்கள் எல்லாம் இனி நானே என்று
என் வாழ்வில் இறையானவர்
சொந்தங்கள் எல்லாம் இனி நானே என்று
என் வாழ்வில் இறையானவர்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

நான் வணங்கும் தெய்வமே

நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே
வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே
வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே

பாதையைக் காட்டியே உலகை காத்திடும் இயேசுவே
பாதையைக் காட்டியே உலகை காத்திடும் இயேசுவே
ஆயனே ஐயரே எமக்கு ஆறுதல் தாருமே
ஆயனே ஐயரே எமக்கு ஆறுதல் தாருமே

நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்துதான் பாடினேன்
தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்துதான் பாடினேன்
வானிலும் மண்ணிலும் உமது வல்லமை விளங்குதே
வானிலும் மண்ணிலும் உமது வல்லமை விளங்குதே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாருமே
நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாருமே
ஆதியில் வார்த்தையாய் வந்த ஆண்டவர் இயேசுவே
ஆதியில் வார்த்தையாய் வந்த ஆண்டவர் இயேசுவே

நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

மரண இருளில் இருந்த எமக்கு

மரண இருளில் இருந்த எமக்கு
ஒளியைத் தந்தவர் யார்
இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்
தூக்கி எடுத்தவர் யார்
தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

தேவ சாயல் எமக்குத் தந்த
தேவ மைந்தனும் யார்
இங்கு நாளும் நம்மை வழி நடத்தும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மாய உலகில் வாழும் நமக்கு
வாழ்வைத் தந்தவர் யார்
எங்கள் ஆயனாக இங்கு வந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

திசைகள் மாறிச் சென்ற நமக்கு
உதவி செய்தவர் யார்
என்றும் மேய்ப்பராகி வழியைக் காட்டும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மனித வாழ்வின் நடை முறைக்கு
வழி வகுத்தவர் யார்
எம்மை மனந்திருப்பி அணைத்துக் கொண்ட
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

என்னிடம் வாவென்று இயேசு

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல்
தருவேன் என்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்
வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்

ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்
ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்
ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்

உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்
உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

நீர் கொடுத்த வாழ்வு இது

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா…

பேரின்பக் கன்மலையே என்னை

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து  என்னை
ஆதரித்துக் கொள்ளும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

Popular Posts

My Favorites

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு...